வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:13 IST)

”எங்கப்பன் குதுறுக்குள் இல்ல”.. தூசிதட்டும் கொடநாடு கொலை வழக்கு! – அமளி செய்து வெளியேறிய அதிமுக!

தமிழக சட்டமன்ற கூட்டத்தில் கொடநாடு கொலை வழக்கு பற்றி முதல்வர் மு,க.ஸ்டாலின் பேசிய நிலையில் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

தமிழக ஆண்டு பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இதை எதிர்த்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.

அதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் “எங்கப்பன் குதுறுக்குள் இல்லை என்பது போல நீங்கள் ஏன் இவ்வளவு அமளியை ஏற்படுத்துகிறீர்கள் என கேட்டதாகவும், அதை தொடர்ந்து அதிமுகவினர் பலர் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.