புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

அதிமுக வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம்!

அதிமுக வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதிமுக வேட்பாளர் பட்டியலில் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு இராமசாமி என்பவர் வேட்பாளராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டார். ஆனால் திடீரென தற்போது அவருக்கு பதிலாக புதிய வேட்பாளர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் 
 
குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராமஜெயம் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி அவர்கள் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
 
அதேபோல் அதிமுகவின் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தொகுதிக்கு ஜான் தங்கம் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது