செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூன் 2024 (13:00 IST)

அதிமுக முன்னாள் அமைச்சரை வரவேற்று பேனர்.. திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட்..!

அதிமுக முன்னாள் அமைச்சரை வரவேற்று பேனர் வைத்த திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான தடகளப் போட்டி நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வரவேற்று அண்ணா விளையாட்டு அரங்கில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த சம்பவத்தின் காரணமாக, திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக விடுதி காப்பாளர் கண்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு பேனர் வைத்த தகவல் அமைச்சர் கேஎன் நேருவுக்கு தகவல் சென்றதாகவும், இதையடுத்தே இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran