அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க பிரச்சாரம்: கலக்கத்தில் தி.மு.க
அரவக்குறிச்சி தொகுதியின் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
தமிழக அளவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற வேண்டிய அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகள் மட்டுமில்லாது உடல் நிலை சரியில்லாமல் திருப்பரங்குன்றம் அ.தி.மு.க எம்.எல்.ஏ காலமானதையடுத்து மொத்தம் தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டமன்ற தொகுதியின் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19 ம் தேதி நடைபெற உள்ளது.
இன்று காலை முதல் ஆங்காங்கே தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள செந்தில் பாலாஜி நூறு விழுக்காடு வெற்றி வாய்ப்பு கணிப்பில் தீவிரமாக உள்ள செந்தில் பாலாஜியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழக அளவில் எதிர்பார்ப்பு என்ன ? என்றால் அவரை எதிர்த்து நிற்கும் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி டெபாசிட் இழக்க செய்யும் அளவிற்கு அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
அரவக்குறிச்சி தி.மு.க வின் கோட்டையாக கடந்த மூன்று தேர்தலில் இருந்த போது தற்போது செந்தில் பாலாஜி தேர்தலில் நிற்பதினால் மீண்டும் அ.தி.மு.க வின் கோட்டையாக மாறி விடும் என்பது சந்தேகமில்லாமல் நிருபணமாகி உள்ளதாகவும், செந்தில் பாலாஜியின் வெற்றி அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால் அவரை எதிர்த்து நிற்கும் தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி டெபாசிட் வாங்க கூடாது என்று தனது ஜெயலலிதாவின் ஆனைக்கிணங்க, அனல் பறக்கும் பிரச்சாரத்தை எந்த வித ஆடம்பரமில்லாமல் செய்து வருகின்றார்.