செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (21:35 IST)

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு

Electricity Board
கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

சமீபத்தில், தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதில், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால்   முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையிலான திமுக அரசு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. 

இந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''கனமழையின் காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதீத பாதிப்பினை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு கூடுதல் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

1. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மின் உபயோகிப்பாளர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 02.01.2024 வரை இருந்த நிலையில், அபராதத் தொகை இல்லாமல் 01.02.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.   2. இந்த காலநீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின்நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்''என்று தெரிவித்துள்ளார்.