புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (15:43 IST)

ஆளுனருக்கு ஒரு தலைமை செயலாளர்: என்ன நடக்குது தமிழகத்தில்?

தமிழகத்தில் ஏற்கனவே கிரிஜா வைத்தியநாதன் என்பவர் தலைமைச்செயலாளராக பதவி வகித்து வரும் நிலையில் ஆளுனருக்கு என தனியாக ஒரு தலைமை செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழக கவர்னராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட பன்வாரிலால் புரோஹித் ஏற்கனவே அமைச்சர்கள் இல்லாமல் அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் இடையே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில் தற்போது தமிழக ஆளுனருக்கு கூடுதல் செயலாளர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
ஐஏஎஸ் அதிகாரியான ராஜகோபால் என்பவர் இந்த பதவிக்கு நியமனம் செய்யபப்ட்டுள்ளதோடு, இவருக்கு தலைமை செயலாளருக்கு உள்ள சம அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர் ஆளுனருக்கான தலைமை செயலாளர் என்றே கூறப்படுகிறது.
 
கூடுதல் தலைமை செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் விரைவில் ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கான அறிகுறியே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.