1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kalraj mishra may appoint as TN Governor

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா?

TN Governor
தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பாஜக மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


 

 
உத்தரபிரதேசத்தை சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா, மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 2014ம் ஆண்டு, அவரின் அமைச்சரவையில் இடம் பிடித்திருந்தார். தியோரியா மக்களவைத் தொகுதியில் இருந்து அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
 
இந்நிலையில், தமிழகத்தின் முழு நேர ஆளுநராக அவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா திரும்பியதும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
 
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தமிழகத்தில் அப்போது நிரந்தர ஆளுநர் இல்லையெனில், அது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிற காரணத்திற்காக தமிழகத்தில் கல்ராஜ் மிஸ்ராவை ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
அனிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர்த்த பாமக: காரணம் அரியலூர்?