1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (14:16 IST)

ஈசிஆர் சாலையை இப்படி பெயர் மாற்றலாமே: நடிகை டுவிட்

Gayathri
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
இந்த அறிவிப்புக்கு பெரும்பாலானோர் வரவேற்பும் ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து கூறியதாவது:
 
விரைவில் தமிழ்நாடு என்ற பெயரை திராவிட நாடு என்று மாற்ற எதிர்பார்க்கலாமா? ஈ.சி.ஆர் பெயர் முன்னாள் முதல்வர் கருணாநிதி சாலை என மாற்றம். ஒரே ஒரு திமுக குடும்பத்தால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். தமிழக வரலாற்றை அழிக்க முயல்கின்றனர்
 
மகாபலிபுரம் கோயிலைக் கட்டிய பல்லவ வம்சத்தின் இரண்டாம் நரசிம்மவர்மன் மன்னரின் பெயராக அது ஏன் இருக்கக்கூடாது?