செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2018 (21:48 IST)

காதலர் தினத்தன்று விவாகரத்து பெற்ற நடிகர்...

கனா காணும் காலங்கள் தொலைக்காட்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி. 

 
அதன் பின் இவர் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர் வலம் ஆகிய படங்களில் நடித்தார். 
 
திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில்,  மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மேலும், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். 
 
அந்நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு நேற்று விவாகரத்தை கொடுத்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தகவலை யுதன் பாலாஜி தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
காதலர் தினத்தன்று என்ன திட்டம் என அனைவரும் என்னிடம் கேட்கிறனர். ஆனால், கடவுள் எனக்கு வேறு திட்டத்தை கொடுத்துள்ளார். நீதிமன்றம் எனக்கு விவாகரத்து அளித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.