ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (10:37 IST)

இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுள் அனுப்பிய தூதர் ஹெச்.ராஜா - விசு புகழாரம்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை புகழ்ந்தி நடிகரும், இயக்குனருமான விசு கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகியுள்ளது.

 
இந்து கோவில் சொத்துக்களை மீட்கவும், கோவில் சொத்துகளுக்கு முறையாக வாடகை வசூலிக்கப்படாததை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஒருநாள் ஹெச்.ராஜா தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. அதில், பாஜக ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
 
அந்த போட்டத்தில் கலந்து கொண்ட விசு, இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஹெச்.ராஜா என புகழ்ந்து பேசினார்.

 
இந்த விவகாரத்தை கையிலெடுத்த பலரும் விசுவுக்கு எதிராக மீம்ஸ்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அவர்களை எதிர்த்து பாஜக ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்க அவர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.