திங்கள், 3 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:04 IST)

திமுக, அதிமுக, பாஜக, பிரமுகர்கள் தவெகவில் இணைகிறார்களா? எப்போது? எங்கு?

நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டியிட உள்ளது.

இந்த நிலையில், திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் இருந்து சிலர் விஜய்யின் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் இணைப்பு விழா நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் "தமிழக வெற்றி கழகம்" கட்சியில் சேர முடிவு செய்திருப்பதாகவும், அதேபோல் பாஜகவில் உள்ள இரண்டு முக்கிய பிரபலங்களும் விஜய் கட்சியில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

திமுகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளும் "தமிழக வெற்றி கழகம்" கட்சியில் சேர உள்ளதாகவும், இந்த கட்சியில் இணைய உள்ளவர்களின் பெயர் மற்றும் இணைவதற்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இணைப்பு விழாவை எப்போது, எங்கு நடத்தலாம் என்பது குறித்து "தமிழக வெற்றி கழகம்" நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இதன் மூலம், சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு பொதுமக்களிடமிருந்து, முக்கிய அரசியல் கட்சிகளில் இருந்து சில முக்கிய தலைவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என கூறப்படுகிறது. இது, அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Edited by Siva