ரேசனில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை - அமைச்சர் சக்ரபாணி
பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் விரைவில் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை ஒட்டி அரசு சர்பில், இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவை பாக்கெட்டுகளில் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண்விழி அடையாளம் மூலம் மக்களுக்குப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.