Daily Horoscope
✕

ஆவின் இனிப்பு வகைகள் ரு.80 வரை விலை உயர்வு: இன்று முதல் அமலுக்கு வந்தது

Written By Mahendran
Updated: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:16 IST)
ஆவின் நிறுவனத்தில் இனிப்பு வகைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த இனிப்பு வகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென ஆவின் இனிப்பு வகைகள் இன்று முதல் விலை உயர்வு என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் குலாப்ஜாமூன், ரசகுல்லா, பால் கோவா உள்ளிட்ட இனிப்பு பொருட்கள் 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை உயர்வு என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆவின் பால் பண்ணையில் பால்கோவா, மைசூர்பாக் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து ஆவின் பால் பண்ணையில் இனிப்பு வகைகளின் விற்பனை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென விலையை உயர்த்தியது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

எல்லாம் காட்டு

எப்பவேனா இடைத்தேர்தல் வரும்!.. ரெடியா இருங்க!.. திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..

பொய் சொல்றாங்க!.. திமுக - அதிமுக சேரல!.. இதான் நடந்துச்சி!.. டிடிவி தினகரன் பேட்டி...

நான் மிரட்டினேன்.. அதனாலதான் இந்தியா - பாகிஸ்தான் போர் நின்னுச்சு!.. அடங்காத டிரம்ப்!...

சும்மா ஆசைக்கு அரசியலுக்கு வரக்கூடாது!.. தனுஷுக்கு பேரரசு அட்வைஸ்!..

கொடுக்க முடியாது!.. மறுத்த பழனிச்சாமி!.. தனுஷ் டெல்லி போனதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments