செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (11:23 IST)

ஆவின் பால் விலை திடீர் உயர்வு..! பொதுமக்கள் அதிர்ச்சி..!

ஆவின் பால் விலை திடீரென உயர்ந்து விட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 லிட்டர் எடை கொண்ட  பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் 10 ரூபாய் உயர்ந்தது.  5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் 210 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் திடீரென 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 220 என்று விற்பனையானது.

 இந்த நிலையில்  தற்போது மீண்டும் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 200ml ஆவின் பால் பாக்கெட் 50 காசுகள் உயர்ந்து உள்ளதாகவும்  வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வரும் 200 ml ஆவின் பால் இன்று முதல் வயலட் நிற பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் பால் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Mahendran