திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (11:18 IST)

தங்கம் விலை மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் வருகிறது என்பதும் குறிப்பாக தீபாவளியை ஒட்டி தங்கம் விலை குறைந்து வருவதால் ஏராளமான மக்கள் தங்கத்தை வாங்கினார்கள் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தீபாவளி முடிந்த பின்னரும் தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூபாய் 5635.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 சரிந்து ரூபாய் 45080.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6105.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48840.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran