1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (10:39 IST)

ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கவும் ஆதார் அவசியம்...

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடு பிடி வீரர்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
2 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள அனைவரும் ஆதார் எண்ணை பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆதார் அட்டை இல்லையெனில், அரசு நலத்திட்டங்கங்கள் கிடைக்காது என பயமுறுத்தியதால், பெரும்பாலானோர் ஆதார் அட்டையை பெற்றுவிட்டனர். இதுவரை சுமார் 80 கோடி பேர் ஆதார் அட்டையை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. 
 
அதுபோக, கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு, தொலைப்பேசி எண் இணைப்பு, பான் கார்டு  என அனைத்தையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதுவும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவிப்புகள் வெளியானது. அதன் பின் 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
 
அந்நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. அதேபோல், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வருகிற 14ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. அதில் பங்கு பெறும் காளைகள் மற்றும் வீரர்கள் முன்பதிவு தற்பொது நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இந்த போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் தங்கள் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஆதார் எண் இல்லாத வீரர்கள் தங்கள் ரேஷன் கார்டை சமர்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.