வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 மே 2023 (22:30 IST)

குதிரை வாங்க தந்தை பணம் தராததால் உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையை மஞ்சநாயக்கனூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் 54 வயதான பாலசுப்பிரமணியம் இவரது மகன் 24 வயதான மோகன பிரசாந்துக்கு குதிரை மீது அலாதி பிரியம் இருந்ததால் அவர் தனது தந்தை இடம் தனக்கென சொந்தமாக ஒரு குதிரை வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மோகனபிரசாத் தந்தை குதிரை வாங்கி தர மறுத்துள்ளார்.
 
 இதனால் தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் மனம் விரக்தி அடைந்த மோகனபிரசாத் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்பு அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
 
 அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் இதனை அடுத்து  உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆழியார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . குதிரைக்காக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.