புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (11:04 IST)

நடத்தையில் சந்தேகபட்ட கணவன் - குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

மதுரையில் கணவன் தனது காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால், மனமுடைந்த அவர் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை டி.வி.எஸ்.நகர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. அவரது மனைவி மைக்கேல்ஜீவா. இவர்களுக்கு ஹரிதா (4), ஹரிகிஷோர்குமார்(3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். காதலித்து திருமணம் செய்த இவர்களுக்குள் கடந்த சில தினங்களாக சண்டை இருந்து வந்துள்ளது. 
 
அது என்னவென்றால், ராஜா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகித்துள்ளார். மனைவியிடம் நீ வேற யார் கூடயோ தொடர்பு வெச்சுட்டு இருக்க அது எனக்கு தெரியும் என்றும், இந்த குழந்தைகள் எனதில்லை என்றும் கூறியுள்ளார் ராஜா. மனைவி, மனைவியின் குடும்பத்தார், குழந்தைகளை, ராஜாவும் அவரது குடும்பத்தாரும் கீழ்த்தரமாக பேசி சித்ரவதை செய்துள்ளனர்.
 
இதனால் மனமுடைந்த மைக்கேல்ஜீவா, 2 குழந்தைகளின் முகத்தில் பிளாஸ்டிக் பைகளை மூடி இறுக்கி கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராஜா மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பு மைக்கேல்ஜீவா எழுதிய உருக்கமான கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர்.
 
அதில் என் சாவுக்கு யாரையும் காரணம் சொல்ல மாட்டேன். ஆனால் எனக்கு செய்த துரோகத்துக்கு நீயும் உன் குடும்பத்தாரும் கண்டிப்பா அனுபவிப்பிங்க. அத நான் பார்க்க தான் போறேன். உனக்கு நான் உயிர் பிச்சை போடுற. வருகிற 22.7.2018 குழந்தைகளுக்கு பிறந்தநாள், அத கொண்டாட முடியாம பண்ணிட்டிங்க இல்ல. எனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை. என்னையும், என் குழந்தைகளை கேவலப்படுத்தியதற்கு நீங்க அனுபவிப்பீங்க என்று எழுதியிருந்தார்.
 
போலீஸார் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.