1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By SInoj
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (18:54 IST)

பெண்ணுக்கு முத்தம் கொடுத்த வேட்பாளரால் பரபரப்பு!

bjp candidate
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக  நடைபெறவுள்ளது.
 
சமீபத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
ஒவ்வொரு மா நிலத்திலும் மக்களை ஈர்க்க வேட்பாளர்கள் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தும், பரோட்டா சமைத்தும், வித்தியாசமான நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் ககென் முர்மு என்பவர் இன்று பரப்புரை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென்று முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதுகுறித்த புகைப்படம் வெளியாகி  சமூக வலைதளங்களில் பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பும், கண்டனமும் குவிந்து வருகிறது.