1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (09:27 IST)

நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்? கொந்தளித்த ஆ.ராசா

a raja
சமீபத்தில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கணும் என ஆவேசமாக ஆ ராசா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று தி நகரில் நடந்த திமுக முப்பெருவிழாவில் பேசிய ஆ ராசா, ‘யார் தப்பு செய்தாலும் மன்னிப்பு கேட்க வேண்டும், நான் மன்னிப்பு கேட்க தயார், ஆனால் நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?
 
தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி பதவி ஏற்கும்போது என்ன சொல்லி பதவியேற்றார்? அரசியல் சட்டத்தை காப்பாற்றுவேன் என்று கூறினாரே, அதை காப்பாற்றினாரா? அரசியல் சட்டத்தில் சனாதனம் எங்கே இருந்து வந்தது?
 
நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதன தத்துவத்துக்கு தான் எதிரி. அந்த சனாதனத்தை வீழ்த்தாதவரை அரசியல் சட்டம் வாழாது என்று அவர் பேசினார்.