செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (07:44 IST)

முதல்வர் இல்லத்தை திடீரென முற்றுகையிட்ட 50 பேர்: சென்னையில் பரபரப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் திடீர் என 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மின்வாரியத்தின் கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து மின் வாரியம் கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதை கண்டித்து திடீரென இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தை 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்
 
இந்த முறைகேடு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தகுதியானவர்களுக்கு மின்வாரியத்தின் கேங்மேன் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்
 
இந்த நிலையில் முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் என்பதும் அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் முதல்வர் இல்லம் இருக்கும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது