செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (20:51 IST)

நடிகர் விஜய் காரை முற்றுகையிட்ட ரசிகர்கள் - பரபரப்பு வீடியோ!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.
 
விஜய் நடித்து கடைசியாக பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான படம் படம் மாஸ்டர். இந்த படம்  25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் விஜய்  பனையூரில் உள்ள தனது வீட்டில் ரசிகர்களை சந்தித்து பேசி அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். 
 
இந்த சந்திப்பில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜய் ரசிகர் மனற நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் பங்கேற்று அவரை சந்தித்தனர். அப்போது விஜய்யை பார்க்க ஆர்வத்தின் உச்சத்தில் இருந்த ரசிகர்கள் அவரது காரை முற்றுகையிட்டு... தலைவா தலைவா என ஆக்ரோஷமாக கூச்சலிட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வைரலாகும் அந்த வீடியோ இதோ...