செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (07:54 IST)

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , திறக்கப்பட உள்ளது.

முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த புதிய சிலையை இன்று காலை 9.15 மணிக்கு திறந்து வைக்கவுள்ளனர். ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த மாதம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று ஒரு சிலை அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இந்த சிலை ஜெயலலிதா போன்று இல்லை என்று அதிமுகவினர்களே அதிருப்தி அடைந்ததை அடுத்து புதிய சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று புதிய சிலை வைக்கப்படவுள்ளது.