கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய் - தட்டிக் கேட்ட மகனை கொலை செய்த அவலம்
திருச்சியில் தாயின் கள்ளக்காதலை தட்டிக் கேட்டதால், அவரது தாய் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த மீனாம்பாள் என்பவர் தனது கணவன் மற்றும் மகன் அங்குராஜுடன்(14) ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். மீனாம்பாளின் கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் மீனாம்பாள் முத்தையன் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். மீனாம்பாள், மீனாம்பாளின் சிநேகிதி லட்சுமி, முத்தையன் ஆகிய மூவரும் சேர்ந்து குடித்துவிட்டு கூத்தடித்து வந்துள்ளனர்.
ஒருசமயம் மீனாம்பாளும், முத்தையனும் உல்லாசமாக இருந்ததை அங்குராஜ் பார்த்துள்ளான். இதுகுறித்து அங்குராஜ் தனது உறவினர்களிடம் கூறி, தனது தாய்க்கு புத்திமதி சொல்லுமாறு கூறியுள்ளான். அவனது உறவினர்களும் மீனாம்பாளுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
மகன் உயிரோடு இருந்தால், கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த மீனாம்பாள், தனது பிள்ளையை கொள்ள திட்டமிட்டார். அதன்படி அங்குராஜை கள்ளக்காதலனோடு சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின் ஒன்றும் தெரியாததுபோல் மகன் மயங்கிவிட்டான் என கூறி அவனை மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்குராஜை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின் நீலிக்கண்ணீர் வடித்த மீனாம்பாள், மகனின் இறுதிச் சடங்குகளை செய்து கொண்டிருந்தார். அங்குராஜின் மரணத்தில் சந்தேகமிருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அங்குராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் சிறுவன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் மீனாம்பாளையும், லட்சுமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களது கள்ளக்காதலன் முத்தையனை தேடி வருகின்றனர்.
அற்ப சுகத்திற்காக பெற்ற தாயே மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.