செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (10:58 IST)

பட்டப்பகலில் பொது இடத்தில் இளம்பெண்ணை முத்தமிட்ட வாலிபர் கைது(வைரலாகும் வீடியோ காட்சி)

மும்பை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இளம் பெண்கள் வெளியே செல்வதற்கு கூட பயப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது.
 
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் ரயில்வே பிளாட்பாரத்தில் ஒரு இளம்பெண் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் திடீரென அந்தப் பெண்ணை இழுத்துப் பிடித்து முத்தமிடுகிறார். இதனால் மிரண்டு போன அந்த பெண் அந்த நபரை தள்ளிவிடுகிறார்.
 
இதனையடுத்து அந்த மர்ம நபர் எதும் நடக்காதது போல் அந்த இடத்தைவிட்டு செல்கிறார்.  இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.  பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.