ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (20:18 IST)

பெட்ரோல் டீசல் வாங்க பணம் இல்லையா? அதற்கும் லோன் தர்றாங்க!

தினமும் பொழுது விடிகின்றதோ இல்லையோ, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வருமானம் மட்டும் உயராததால் ஒவ்வொரு நடுத்தரவர்க்க வீட்டிலும் பெட்ரோல் விலை உயர்வால் பட்ஜெட்டில் துண்டு விழுகிறது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் வாங்க பணமில்லையா, அதற்கும் நாங்கள் லோன் தருகிறோம் என கோவையை சேர்ந்த ஒரு நிதி நிறுவனம் முன்வந்துள்ளது. ஏற்கனவே வாகனங்கள் வாங்க லோன் அளித்து வரும் இந்த நிறுவனம் முதல்கட்டமாக வாகன போக்குவரத்து தொழில் செய்பவர்களுக்கு பெட்ரோல், டீசல் வாங்க லோன் தர முடிவு செய்துள்ளது.

இதன்படி இந்துஸ்தான் பெட்ரோலியன் நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகளில் மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு தேவையான பெட்ரோல் ,டீசலை நிரப்பிக்கொள்ளலாம். அதன் பின்னர் பணம் இருக்கும்போது அதற்கான தொகையை ஒருசிறு வட்டியுடன் செலுத்தினால் போதும். மாதக்கடைசியில் பெட்ரோல் போட காசில்லாமல் தவிப்பவர்களுக்கு இந்த லோன் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.