1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (17:26 IST)

விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

Election Commission
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியுள்ளது. பாஜகவில் இணைந்த விஜயதாரணி , எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விஜய்தாரணி வெற்றி பெற்ற நிலையில் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் திடீரென பாஜகவில் இணைந்தார். 
 
இந்த நிலையில் பாஜகவில் இணைந்த விஜயதாரணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு கடிதம் எழுதிய நிலையில் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது விளவங்கோடு  தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran