1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (13:10 IST)

சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்த மாணவியை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Sivasankar Baba
சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்த மாணவியை காணொளி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
 சிவசங்கர் பாபா தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் மாணவி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படும் மாணவி மின்னஞ்சல் மூலம் அளித்த புகாரின் உண்மை தன்மை குறித்து சிவசங்கர் பாபா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
 
 கேளம்பாக்கம் சர்வதேச பள்ளியில் படித்த அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் எனவே அவரை நேரில் ஆஜராக செய்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் சிவசங்க பாபா தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. 
 
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவியை காணொளி மூலம் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran