செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:53 IST)

விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு வீடு: புதுவை அரசு

student house
விஷம் வைத்து கொல்லப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு வீடு: புதுவை அரசு
தனது மகனை விட அதிக மதிப்பெண் எடுத்த மாணவனை மாணவியின் தாய் ஒருவர் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மரணமடைந்த மாணவரின் பெற்றோருக்கு புதுவை அரசு வீடு வழங்கியுள்ளது.
 
காரைக்கால் பள்ளி மாணவன் பால மணிகண்டன் என்பவரை விஷம் வைத்து மாணவியின் தாயார் ஒருவர் கொலை செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் 
 
இந்த நிலையில் கொல்லப்பட்ட மாணவரின் குடும்பத்துக்கு குடிசை மாற்று வாரியம் வீடு வழங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் அடிப்படையில் புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா வீட்டின் சாவியை பால மணிகண்டன் தந்தை ராஜேந்திரன் அவர்களிடம் ஒப்படைத்தார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது