வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (17:56 IST)

ஆணோ, பெண்ணோ நல்ல தலைவர் வேண்டும்! அதிமுக எம்.எல்.ஏ

அதிமுகவுக்கு ஒரு சிறப்பாக காலம் வரும். அன்றைக்கு பெண் தலைவர் ஒருவர் கட்சியை வழி நடத்துவார். கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு’ என அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் கூறினார். அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலாவைத்தான் மறைமுகமாக கூறுவதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல தலைவர் உருவாக வேண்டும் என்று மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ நட்ராஜ் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் கோயில் சிலைகள் மீட்பு விவகாரத்தில் சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் அவர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக எம்எல்ஏ நட்ராஜ் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்கள் சங்கம்  சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாமை துவக்கிய பின்னர் செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ நட்ராஜ் இவ்வாறு கூறினார்