திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (20:30 IST)

திருமண வரவேற்பில் சிலிண்டர் வெடித்து சிறுமி பலி

Death
திருப்பதியில் அருகே திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் சிலிண்டர் வெடித்ததில் சிறுமி பலியாகினார்.
 

ஆந்திர  மாநிலம் திருப்பதி  மாவட்டம் பரமேஸ்வரமங்கலத்தில் தனியார் மண்டம் உள்ளது. இங்கு நேற்றிரவு நடைபெற்ற திருமண  வரவேற்பு நிகழ்ச்சியின்போது, மண்டபம் முழுவதும் பலூன்களால் அலங்காரம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக 4 கிலோ எடைகொண்ட பலூன் கேஸ் நிரப்பும் சிலிண்டர் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பலூன்களை ஊதி அலங்காரம் செய்து வந்தனர்.

அப்போது திடீரென்று கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், திருமண வரவேற்புக்கு வந்த புத்தூரைச் சேர்ந்த சாந்தினி (11) என்ற சிறுமியின் தலை மீது சிலிண்டரின் பாகம் விழுந்தது. இதனால் சிறுமி படுகாயமடைந்தார்.

அவரை மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.