ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (10:28 IST)

ஈபிஎஸ்க்கு எழுதப்பட்ட போலி அறிக்கை.. விழுப்புரம் டிஎஸ்பியிடம் சி.வி.சண்முகம் புகார்

விழுப்புரம் வேட்பாளர் பாக்யராஜ் நிறுத்தப்பட்டத்தில் விருப்பம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்க்கு, அதிமுக எம்பி சி.வி.சண்முகம் எழுதியதை போல் சமூக வலைத்தளத்தில் பரவிய அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கை போலி என்றும், அதனை வெளியிட்டவர் மீது நடவடிக்கை கோரியும் சி.வி.சண்முகம் விழுப்புரம் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
 
சமூக வலைத்தளத்தில் பரவி வரும் போலி அறிக்கையில், ‘விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ்  நிறுத்தபட்டத்தில் தனக்கு விருப்பம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ராஜ்ய சபா உறுப்பினர் சிவி சண்முகம் கடிதம் எழுதியதை போல்  ஒரு கடிதம் சமூக வலை தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இந்த போலி கடிதத்தை உண்மை என நம்பி விழுப்புரம் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது போலி கடிதம், வாக்காளர்களை திசை திருப்ப மேற்கொள்ளப்பட்டதாக கூறி  அதிமுக வழக்கறிஞர் தமிழரசன், ராதிகா செந்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 
 
மேலும் சிவி சண்முகம் அளித்தது போன்று பொய்யான அறிக்கை தயார் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
 
Edited by Mahendran