ரூ.2000 கோடியுடன் தலைமறைவான நிதி நிறுவன அதிபர்: குமரியில் பரபரப்பு
குமரி மாவட்டத்தில் நிர்மல் கிருஷ்ணா என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நிர்மல் என்பவர் பொதுமக்கள் டெபாசிட் செய்த சுமார் ரூ.2000 கோடியை சுருட்டி கொண்டு தலைமறைவாகிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏறபட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் பத்தம்பாலை என்ற பகுதியில் இயங்கி வரும் இந்த நிதி நிறுவனம் கடந்த சில வருடங்களாக நம்பிக்கையுடன் நடத்தப்பட்டு வந்ததால் இந்த நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்தனர்.
இவர்களில் வேணுகோபால் என்பவர் ரூ.17 லட்சம் தனது மகளின் திருமண தேவைக்காக டெபாசிட் செய்தார். சமீபத்தில் இவர் தன்னுடைய பணத்தை கேட்டதற்கு நிதி நிறுவனத்தினர் இழுத்தடித்துள்ளனர். இதனால் மனமொடிந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தால் நிதி நிறுவனத்திர்கு நெருக்கடி ஏற்படவே, உடனே ரூ.2000 கோடியுடன் நிதிநிறுவன அதிபர் நிர்மல் தலைமறைவானார். நிர்மலை கண்டுபிடித்து பாதிக்கப்பட்டவர்களின் பணம் கிடைக்க தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.