புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth.K
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (09:32 IST)

உடைந்த ரிமோட்; பயந்த சிறுமி தற்கொலை! – சேலத்தில் சோகம்!

சேலத்தில் டிவி ரிமோட்டை உடைத்து விட்டதால் பெற்றோருக்கு பயந்து சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசக்குட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி கவியரசி, பிரபா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் கவியரசி அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பெற்றோர் இருவரும் நேற்று வெளியே சென்றிருந்த நிலையில் விடுமுறையில் இருந்த கவியரசி, பிரபா இருவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது டிவி பார்ப்பதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் பிரபா டிவி ரிமோட்டை உடைத்து விட்டதாக தெரிகிறது.

பெற்றோர் வந்தால் தண்டிப்பார்கள் என பயந்த பிரபா வீட்டின் கதவை தாழிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற சிறிய விஷயத்திற்காக சிறுமி பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K