செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (16:10 IST)

காதலியின் திருமணத்தில் தீக்குளித்த காதலன் பரிதாபமாக உயிரிழப்பு

சென்னையில் தான் காதலித்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்ய முற்பட்டதால், காதலிக்கு திருமணம் நடைபெற்ற திருமண மண்டப வாசலிலேயே இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.
சென்னை பீர்க்கன்கரணையை சேர்ந்தவர் சந்துரு. இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
 
இவர்களின் காதல் விஷயம் அந்த பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வரவே, அவர்கள் அந்த பெண்ணிற்கு வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயம் செய்தனர். இதனால் அந்த பெண் தன் காதலனின் தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்டார்.
 
இதனால் மனமுடைந்த அந்த வாலிபன் சமீபத்தில் தனது காதலிக்கு திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் வாசலுக்கு வெளியே நின்று மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர் தற்பொழுது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்வளவு களேபரங்களில் அந்த பெண்ணின் திருமணம் தடையின்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.