திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (16:43 IST)

நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி

திருப்பத்தூரில் நீர்த்தேக்க தொட்டியில்  விழுந்து 2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியில் வசிப்பவர் சுந்தர் மற்றும்  ராதிகா. இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கெளசியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், வீட்டில் கெளசிகா விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த நீர் தேக்க தொட்டியில் தவறி விழுந்துள்ளார் கெளசிகா. பின்னர், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, குழந்தையை பிரேத பரிசோதனையை செய்ய கூடாது என்று உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், திருப்பத்தூர், நகர காவல் ஆய்வாளார் ஹேமாவதி உறவினர்களிடம் பேச்சு நடத்தினர். இருப்பினும் பிரேத பரிசோதனை செய்த குழந்தையின் உடலை ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.