1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2016 (04:42 IST)

மதுகுடித்து பள்ளியில் வாந்தி எடுத்த 9-ம் வகுப்பு மாணவன் சஸ்பெண்டு

வேளச்சேரியில் மதுகுடித்து பள்ளிக்கு சென்று, அங்கு வாந்தி எடுத்த 9-ம் வகுப்பு மாணவன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
 

 
 
சென்னை வேளச்சேரி ராஜலட்சுமி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிரதீப் என்னும் மாணவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பிரதீப் பள்ளிக்கு தள்ளாடியபடியே நடக்க முடியாமல் தட்டு தடுமாறி சென்றவர் தலைமை ஆசிரியை அறை அருகே சென்ற போது திடீரென்று வாந்தி எடுத்துள்ளார். மாணவர் வாந்தி எடுத்ததை அறிந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர்கள் விரைந்து சென்று அந்த மாணவரை பார்த்தனர். அப்போது அவர் மது குடித்து போதையில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அந்த மாணவரை பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்தனர்.
 
மது பழக்கம் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் மது அருந்தி விட்டு பள்ளிக்கும் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது பழக்கத்திலிருந்து மாறி வழக்கமானால் மதுவால் பள்ளி மாணவர்களும் பாதிப்படைவார்கள்.