1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (23:17 IST)

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய 9 ஆம் வகுப்பு மாணவன்!

girls
கிருஷ்ணகிரி மாவட்டம்  தேங்கனிக்கோட்டை அருகே உள்ள அரசுப்பள்ளியில் பள்ளி மாணவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு தாலி கட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம்  தேங்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளியில்  படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவன்,தன் வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்துத் தாலி கட்டியுள்ளார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.  பெற்றோர் பள்ளிக்கு விரைந்து தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். பின்னர், மாணவனின் பெற்றோரை அழைத்து, மாணவர் மாணவியரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.   விரைவில் தேர்வு வரவுள்ளதால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.