புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜனவரி 2021 (14:12 IST)

9, 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு!

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் விரைவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் சற்று முன் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்புக்கும் பதினோராம் வகுப்பு பள்ளி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் பள்ளிகளில் சானிடைசர் வசதி வைத்திருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து வகுப்பறையில் அமர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கு பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது