திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2023 (15:35 IST)

புத்தாண்டு இரவில் விதிமீறல்; சென்னையில் மட்டும் 932 வாகனங்கள் பறிமுதல்!

புத்தாண்டு இரவில் சென்னையில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதலே களைகட்டின. அதேசமயம் புத்தாண்டிற்கு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் இரவு 8 மணிக்கு மேல் மணற்பரப்பிற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. முறைகேடாக ரேஸ் நடத்த முயல்வோருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மற்ற போக்குவரத்து விதிமீறல் காரணங்களால் 572 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K