கரூரில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டி: எத்தனை பேர் தெரியுமா?
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து வேட்புமனு பரிசீலனையும் முடிவடைந்துவிட்டது. நேற்று மாலை வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது ஒரு தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி எது என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 77 பேர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிவந்துள்ள நிலையில் அதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக வால்பாறையில் 6 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்
கரூரில் அதிகபட்சமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அந்த தொகுதியில் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது