1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2022 (18:07 IST)

புதுவையில் வேகமாக பரவும் காய்ச்சல்: 747 குழந்தைகள் பாதிப்பு!

fever
புதுவையில் வேகமாக பரவும் காய்ச்சல்: 747 குழந்தைகள் பாதிப்பு!
புதுவையில் குழந்தைகளுக்கு மிக வேகமாக காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
புதுவையில் இன்புளுயன்சா என்ற காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது என்றும் குழந்தைகளுக்கு மிக வேகமாக பரவி வரும் இந்த காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது
 
இதுவரை புதுமையை 747 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று மட்டும் புதிதாக 50 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமுதாய நல வழி மையங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் இதனை அடுத்து காய்ச்சிய குடிநீரை பருகும்படி புதுவை அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க 
 
இந்த நிலையில் கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்த புதுவை அரசு திட்டமிட்டிருப்பதாகவும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு சிகிச்சை அளிக்க புதுவை அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது