திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (19:55 IST)

''742 மாணவர்களும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதவில்லை''- பயிற்சி மைய நிர்வாகி

பிரமிடு ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த 4000 பேர் மாணவர்கள் தேர்வு எழுதியதில், அதில், 742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பயிற்சி மைய நிர்வாகி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி, அரசுத்துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்சர் உள்ளிட்ட 11 வகைப் பணிகளுக்கு  7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், ஜூலை மாதம் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வில் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

24 ஆம் தேதி இந்த குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில், ஒரே பயிற்சி மையத்திலிருந்து சுமார் 2000 பேர்  தேர்ச்சி பெற்றிருப்பதாக கூறப்படும் நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில், முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்கள் பிரமிடு ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்த 4000 பேர் மாணவர்கள் தேர்வு எழுதியதில், அதில், 742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பயிற்சி மைய நிர்வாகி கற்பகம்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தேர்ச்சி பெற்றுள்ள 742 பேரும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதவில்லை.   தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 302 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகவும், மீதமுள்ள 440 மாணவர்கள் காரைக்குடியில் படித்தாலும், வெவ்வேறு மாவட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.


மேலும், டி.என்.பி.எஸ்.சி , ரயில்வே, டெட், உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கும் தங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.