ஊட்டியில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 7 பேர் பலி
நீலகரி மாவட்டம் ஊட்டி அருகே அரசு பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அங்குள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஊட்டி அருகே மந்தடா என்ற கிராமத்திற்கு 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள அபாயகரமான சாலையில் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 220 அடி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பேருந்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி ஆபத்தான நிலையில் உள்ள பலர் அங்குள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.