செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 2 மார்ச் 2023 (14:47 IST)

7 வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு.. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட இல்லை: ஈரோடு தேர்தல் வினோதம்..!

vote
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஏழு சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது என்றும் ஒரு வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தல் ஐந்தாவது சுற்றில் முடிவில் ஏழு வேட்பாளர்கள் தலா ஒரு ஓட்டு மட்டுமே உள்ளார்கள் என்றும் 73 வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. ராஜேந்திரன் என்பவர் தனது ஓட்டை கூட அவருக்கு போடவில்லை என்பதும் அவரது குடும்பத்தினர் கூட அவருக்கு  ஓட்டு போடவில்லை என்பதும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 73 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர்கள் அனைவருமே தோல்வி அடைந்துள்ளனர் என்பது மட்டுமின்றி டெபாசிட் இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் நாம் தமிழர் வேட்பாளர் மற்றும் தேமுதிக வேட்பாளரும் தங்களுடைய டெபாசிட் இழந்துள்ளனர். விளம்பரத்துக்கு மட்டும் போட்டியிடும் வேட்பாளர்களை தவிர்க்க வேண்டும் என்றும் இதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
ஒரு வாக்கு கூட பெறாத வேட்பாளர் எதற்காக போட்டியிட்டார் என்பதே தெரியவில்லை என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva