1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஜனவரி 2025 (10:05 IST)

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தமிழ்நாட்டில் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆண்டின் முதல் போட்டியாக தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது.

 

 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தை பொங்கலை ஒட்டி பல ஊர்களில் நடைபெறுகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலில் போட்டி தொடங்கும் இடமாக தச்சங்குறிச்சி உள்ளது. இங்கு உள்ள புனித வின்னேற்பு அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆண்டின் முதல் வாரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

 

அவ்வாறாக இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் 600 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் கலந்துக் கொள்கின்றனர். 

 

Edit by Prasanth.K