1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (17:15 IST)

ஒரே பைக்கில் சென்ற 6 பேரில் விபத்தில் பலியான 5 பேர்: பெரம்பலூரில் சோகம்!

ஒரே பைக்கில் சென்ற 6 பேரில் விபத்தில் பலியான 5 பேர்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே பைக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற நிலையில் அந்த பைக் விபத்துக்குள்ளாகி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
பெரம்பலூர் மாவட்டம் வேம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற இருசக்கர வாகனம் திடீரென எதிரே வந்த காருடன் மோதியதில் இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த பாண்டியனின் குடும்பத்தினர் 5 பேர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த பைக்கில் சென்ற ஒரு வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உள்ளது என்பதும் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி ஓடி விட்டதாகவும் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இரண்டு பேர்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய பைக்கில் 6 பேர்கள் சென்றதால் நேர்ந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது