1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஜனவரி 2021 (19:08 IST)

9ஆம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கவில்லை என்பதும் இதனை அடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் விரைவில் 9-ஆம் வகுப்புக்கும் 11ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஒன்பதாம் வகுப்பிற்கு 50 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நடப்பு கல்வியாண்டில் பாடங்களை முழுவதுமாக நடத்துவதற்கு போதுமான அவகாசம் இல்லாத காரணத்தினால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு 50% சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது