1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:33 IST)

விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் 50 பேர் கைது!

Vinayagar Chaturthi
திண்டுக்கல்லில் அனுமதியின்றி விநாயகர் சிலையை வைத்த 50 இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு காவல்துறையின் அனுமதி பெற்று விநாயகர் சிலையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது
 
ஆனால் திண்டுக்கல்ல்சி அடுத்த குடை பாரப்பட்டி என்ற பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் அமைப்பைச் சேர்ந்த 50 பேர்களை கைது செய்தனர் 
 
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விநாயகர் சிலையை கைபற்றிய போலீசார், அந்த விநாயகர் சிலைகளை கேணியில் கரைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.