திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (11:53 IST)

ரூபாய் நோட்டுகளால் விநாயகர் அலங்காரம்! – வைரலாகும் ஏலேல சிங்க விநாயகர்!

Lord Ganesh
இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் ஏலேல சிங்க விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

பிரபலமான விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு தீர்த்தவாரி பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் மூலவரான விநாயகர் முழுவதும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

50, 100, 200, 500, 2000 ஆகிய ரூபாய் நோட்டுகளால் மொத்தமாக ரூ.15 லட்ச ரூபாய்க்கு இந்த அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது.